"கொரோனாவின்" அடுத்த மாறுபாடு. பொதுமக்களை அதிகம் பாதிக்குமா.? வெளியான பரபரப்பு தகவல்..!!

Keerthi
3 years ago
"கொரோனாவின்" அடுத்த மாறுபாடு. பொதுமக்களை அதிகம் பாதிக்குமா.? வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனாவின் புதிய மாறுபாடான பி.1.640 என்ற வைரஸை பிரான்ஸ் நாட்டிலுள்ள தொற்று நிறுவனத்தின் கல்வியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பிரான்சில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை அந்நாட்டிலுள்ள ஐ.எச்.யு தொற்று நிறுவனத்தின் கல்வியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை பி.1.640 என்றும், ஐ.எம்.யூ மாறுபாடு என்றும் அடையாளம் கண்டுள்ளார்கள்.

மேலும் இதனை உலக சுகாதார அமைப்பு பல ஆலோசனைகளுக்கு பிறகு கண்காணிப்புக்கு கீழான வைரஸ் என்று அடையாளம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் அதிக பரவலை ஏற்படுத்தக் கூடியது அல்ல
என்று பிரபல தலைவர்களான மரிய வானும், கேதரினும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த வைரஸ் ஒரு சதவீதத்துக்கும் கீழேக தான் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் இந்த வைரஸ் எந்தவித பாதிப்பையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!